780
உறவினரின் மரண செய்தியை உறவினர்களுக்கு சொல்ல சென்ற வயோதிபர் கார் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை நேற்றைய தினம் சனிக்கிழமை பார்வையிட சென்ற போது , சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலை உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக வைத்தியசாலையில் இருந்து , தனது துவிச்சக்கர வண்டியில் விரைந்த போது , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த கார் மோதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி காவல்துறையினா் கார் சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love