451
யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் கருத்துரைக்கும் போதும் அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவதற்கான வேலை திட்டங்கள் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றது ஆனால் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களின் ஊடாக தற்போது காற்றுக் கூட வருகிறதோ தெரியவில்லை. அரசியல்வாதிகள் யாரும் யாழிற்கான குடிநீர் பிரச்சினை தொடர்பில் கதைத்ததாக இல்லை.
அண்மையில் நான் புதிதாக கடமையேற்ற ஆளுநரிடமும் இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளேன். எனவே குடிநீரை கொண்டு வருவதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே நாங்கள் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தீர்மானத்தை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தோம். அந்த கிடப்பில் கிடக்கின்ற அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்
Spread the love