604
விடுமுறையில் தனது வீடு செல்வதற்காக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவ அதிகாரி மீது நேற்றைய தினம் வியாழக்கிழமை நபர் ஒருவர் கண்ணாடி போத்தலால் தாக்கியுள்ளார்.
கோப்பாய் இராணுவ முகாமில் பணியாற்றும் ரணசிங்க எனும் இராணுவ அதிகாரியே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்த இராணுவ அதிகாரி பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
Spread the love