393
தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது சுடரேற்றி பொன் சிவகுமாரனது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளும் கலந்து கொண்டனர்.
பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவல்துறையினரின் சுற்றி வளைப்பின் போது, காவல்துறையினரிடம் அகப்பட்டு விட கூடாது என சைனைட் (நஞ்சு) அருந்தி 1974 யூன் 5ம் திகதி உயிரிழந்தார்.
Spread the love