416
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கொழும்புத்துறை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிறுக்கிழமை இரவு போதையில் தனது வீட்டில் இருந்து பெரிய சத்தமாக தகாத வார்த்தைகளால் கத்தி பெரும் அட்டகாசம் செய்துள்ளார்.
அதனால் பொறுமையிழந்த அயலவர்கள் பொ காவல்துறை அவசர சேவைக்கு அறிவித்ததை அடுத்து , அவரது வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அவரை வீட்டினுள் தேடிய வேளை அங்கே கைக்குண்டு ஒன்று இருப்பதனை அவதானித்துள்ளனர்.
அதனை அடுத்து கைக்குண்டை மீட்ட காவல்துறையினர் , வீட்டில் மறைந்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love