மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக கடந்த மாதம் 3-ம் திகதி முதல் மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமாக மாறியுள்ளது.
.இந்தக் கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிாிழந்துள்ளதுடன் . 310 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தீவிரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவா் கொல்லப்பட்டதுடன் அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளனர். குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் காவல்துறைப் துகாப்புடன் நோய்காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அதனை வழி மறித்த ஒரு கும்பல் அவா்களை வண்டியுடன் சோ்த்து தீ வைத்தது.
இதில் 3 பேரும் உயிாிழந்துள்ளனா். . மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்களும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 1000 வீரர்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் தாங்கிய காவல்துறையினா் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.