பிரபல தாதாவான சஞ்சீவ் ஜீவா நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது இனந்தொியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா். உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதே அவா் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா்.
உத்தரப் பிரதேசத்தின் பிரபல தாதா முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளரான சஞ்சீவ் ஜீவா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. உள்ளூர் பாஜக தலைவர் பிராம் தத் திவேதி கொலை வழக்கிலும் சஞ்சீவ் ஜீவா குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் காவல்துறையினரைக் கண்டித்து கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்