ஆழ்கடலில் மூழ்கிக் இருக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்ப்பதற்காக. 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்ற சிறிய சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் காணாமல் போயுள்ளது. பயணத்தை ஆரம்பித்து ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படையும், தனியார் நிறுவனங்களும் இணைந்து காணாமல் போன நீா்மூழ்கியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
காணாமல் போயுள்ள நீர்மூழ்கியில் 3 நாட்களுக்குத் தேவையான ஓக்சிஜன் மட்டுமே இருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருப்பதால், 5 பேரையும் விரைவில் மீட்க மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணாமல் போயுள்ள நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆழ்கடலில் காணாமல் போயுள்ள சிறிய சுற்றுலா நீர்மூழ்கி அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு லொறி அளவிலான டைட்டன் என்ற நீர்மூழ்கி என்று கூறப்படுகிறது. இந்த நீர்மூழ்கியில் பிரித்தானியாவைச் சேர்ந்த 58 வயது கோடீஸ்வரரான ஹாமிஷ் ஹார்டிங் என்பவரும் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது