Home உலகம் டைட்டான் நீர்மூழ்கியில் இருந்த அனைவரும் மரணம் –   பயண நிறுவனம் அறிவிப்பு!

டைட்டான் நீர்மூழ்கியில் இருந்த அனைவரும் மரணம் –   பயண நிறுவனம் அறிவிப்பு!

by admin

டைட்டானிக் கப்பலைப் பார்க்கப்போன டைட்டான் நீர்மூழ்கியில் இருந்த அனைவரும் மரணித்ததாக  பயண நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடலோரப் படையும் இதனை உறுதி செய்துள்ளது.

இந்த உல்லாச நீர் மூழ்கிக்கப்பலின் சிதைவுகளை அத்திலாந்திக் கடலின் அடியில்,  டைட்டானிக் கப்பல் அருகே- கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்கக் கரையோரக் காவல்படையினர் அறிவித்துள்ளனனர். கடல் அடி ஆழத்துக்கு அனுப்பப்பட்டதூரக் கட்டுப்பட்டில் இயங்கும் ரோபோ வாகனம் ஒன்றே (remote operated vehicle) நீர்மூழ்கியின் சிதைவுகள் எனக் கூறப்படும் பொருள்கள் பரந்து காணப்படுகின்ற பகுதியைப் படம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் “எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் போல்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்.” என நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள். இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காணாமல் போன  நீர்மூழ்கிக் கப்பலில்  3 சுற்றுலாப் பயணிகளும், ஒரு பைலட்டும், ஒரு சுற்றுலா வழிகாட்டியுமாக  5 பேர் இருந்தனர்.

ஹாமிஷ் ஹார்டிங் – 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார். ஷாஸாதா தாவூத் 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர். சுலேமான் தாவூத் – ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்.
பவுல் ஹென்றி நர்கோலெட் – 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் ‘டைவர்’ பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. ஸ்டாக்டன் ரஷ் 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

Spread the love

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More