403
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் , முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, வட மாகாண சபை மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் புனர்வாழ்வு கூட்டுறவு முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவியுமான அனந்தி சசிதரனை சந்தித்து உரையாடினார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இச்சந்திப்பு இடம்பெற்றது.
வடமாகாண மகளிர் உரிமைகள், மனித உரிமைகளை பாதுகாத்தல், காணாமல் போனவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
Spread the love