ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் (4) ஒரே நாளில் 1,600 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு எப்போது வேண்டுமென்றாலும் எரிமலை வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1600 நில அதிர்வுகள் அளவிடப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கம் தலைநகர் பகுதியில் மிகப்பெரிய அளவில் உணரப்பட்டதாகவும், அது தொடரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு அதிர்வுகள் 4 ரிக்டர் அளவிற்கு மேல் இருந்ததாகவும், இது லேசான நிலநடுக்கும் எனவும் கருதப்படுகின்ற விமானம் பறப்பதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்ற போதிலும் ஒன்றிரண்டு நாட்களில் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் கடந்த 2021 மற்றும் 2022-ல் ரெய்க்ஜாவிக்கில் இருநது 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் மலை அருகே எரிமலை வெடிப்பு உண்டாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.