536
உலக அளவில் சுமார் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கொவிட் தொற்று பரவலுக்கு முன்னர் பட்டினியால் அவதியுற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் பட்டினி இல்லாத உலகை உருவாக்கும் இலக்கை அடைவதற்கு இது கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் மாக்சிமோ டோரெரோ சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love