340
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் வியாழக்கிழமை வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னால் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர் அஞ்சலி தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Spread the love