369
கசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே கைதாகி நீதிமன்றில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் , மீண்டும் கசிப்புடன் கைதானவருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் கசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்றில் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து , ஏற்கனவே கசிப்பினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்றில் வழக்கொன்று நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் கசிப்புடன் கைதாகி குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் மன்று 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
Spread the love