396
நீண்டகாலமாக உயிர் கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் குற்றச்சாட்டில் காவல்துறையினரினால் தேடப்பட்டு வந்த நபர் , 05 மில்லிக்கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஜூன் மாதம் காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , சந்தேக நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்த போது குருநகர் பகுதியில் இருந்து தப்பித்து தலைமறைவாகி இருந்தார்.
தலைமறைவாகி இருந்த போதிலும் , போதைப்பொருள் விற்பனையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த நபர் கோப்பாய் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு உள்ளதாக யாழ்,மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழு சந்தேகநபரை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்தியபோது விற்பனைக்காக வைத்திருந்த 05 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் , விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு கீழ் நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ReplyReply allForward
|
Spread the love