உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலை அடுத்து ரஷ்யாவில் மொஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. நேற்றிரவு (29.07.23) இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உக்ரைன் எல்லையில் இருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மொஸ்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 03 ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மொஸ்கோ விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.