மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ராட்சத கிரேன் இயந்திரம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய மேலும் 5 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இன்று அதிகாலை ஷாபூரின் சர்லம்பே கிராமத்திற்கு அருகில் சம்ருத்தி எக்ஸ்பிரஸ் சாலை மூன்றாம் கட்ட கட்டுமானப் பணியின் போது இந்த விபத்து நடந்துள்ளது. நெடுஞ்சாலைகள், புகையிரத பாலங்கள் கட்டுமானங்களின் போது அங்குள்ள பெரிய பெரிய பாறைகளை நகர்த்த இந்த சிறப்பு கிரேன் பயன்படுத்தப்படும். இந்த கிரேனை அங்குள்ள ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம் போல இயக்கியபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.