377
பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பளை பகுதியை சேர்ந்த கஜேந்திரன் பிரணவன் என்பவரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love