494
சாரதியின் தூக்க கலக்கத்தால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கை சேர்ந்த , மகேஸ்வரன் நவரஞ்சிதம் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி வைத்தியசாலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த போது , வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் வீதியோரமாக நின்ற மரத்துடன் மோதி மரம் முறிந்து , பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் மீது விழுந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் மீட்கப்பட்டு , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காரின் சாரதி தூக்க கலக்கத்தில் மரத்துடன் காரினை மோதி விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்த நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love