397
கந்தானை பள்ளிய வீதியில் அமைந்துள்ள இரசாயனதொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தொழிற்சாலையில் கணக்காளராக பணியாற்றியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 02 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறினால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள வைத்தியசாலை அதிகாாிகள் குறித்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தொிவித்துள்ளனா்.
Spread the love