422
மோட்டார் சைக்கிளில் விபத்தில் காயமடைந்த வயோதிப பெண்மணி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த நாகராசா ராசபூபதி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தனது வீட்டுக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீதியை கடக்க முற்பட்ட வேளை , பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love