275
மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது.
இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கின்றனர். இந்த திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோாா் கலந்து கொண்டுள்ளனர். மடு திருத்தலத்திற்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love