416
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்
தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாக விகாரையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல், இரகசியமாக நடைபெற்றது. குருந்தூர் மலையில் நாளை வெள்ளிக்கிழமை சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love