605
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அமரர்களை ஏற்றும் வாகனம் ஒன்றினை நன்கொடையாளரான எஸ்.கே. நாதன் இன்றைய தினம் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் சடலங்களை அவர்களின் வீட்டிற்கு எடுத்து செல்ல அமரர் ஊர்திகளுக்கு பெருமளவான பணம் வழங்க வேண்டிய நிலைமை காணப்படுவதால் , ஏழைகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில் நன்கொடையாளரால் அமரர் ஊர்தி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
அண்மையில் நெடுந்தீவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை , நோயாளர் காவு வண்டியில் ஏற்றி , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வந்தமையால் , நோயாளர் காவு வண்டியில் எப்படி சடலம் ஏற்றலாம் என கேள்வி கேட்டு தாயை குழந்தையின் சடலத்துடன் , பல மணி நேரம் காக்க வைத்திருந்த சம்பவம் ஊடகங்களில் செய்திகளாக வெளியாகி இருந்த நிலையில் பலரும் அமரர் ஊர்தியின் தேவைப்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பிரஸ்தாபித்தமை குறிப்பிடத்தக் கது
Spread the love