பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரச கருவூலத்தில் இருந்த பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கு தொடா்பில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 1 இலட்சம் ரூபா அபராதமும் விதித்திருந்தது. இதையடுத்து, லாகூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட இம்ரான் கான் , சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த தண்டனைக்கு எதிராக இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்ரான் கானை பிணையில் விடுவிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், இம்ரான் கான் இரகசிய காப்புப் பிரமாணத்தை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், அவர் விடுவிக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது