சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று புதன்கிழமை (30) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை(30) காலை 10.30 மணியளவில் மன்னார் நகரில் உள்ள சதொச மனித புதைகுழி பகுதியில் ஆரம்பமானது.
குறித்த போராட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி , முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,திருகோணமலை,அம்பாரை
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அரு
மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி க்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக ஓ.எம்.பி அலுவலக வீதியை சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.