418
கொரியரை வாங்கி விட்டு , பணம் கொடுக்காது , கொரியர் வழங்க சென்ற ஊழியரை வீட்டுக்குள் அழைத்து சென்று தாக்கிய நபரை இளவாலை காவல்துறையினா் கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , மன்று அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வீடொன்றின் விலாசத்திற்கு வந்த கொரியரை , கொரியர் நிறுவன ஊழியர் வழங்க சென்று இருந்தார். அவரிடம் கொரியரை பெற்றுக்கொண்ட நபர் அதற்கு உரிய பணத்தினை வழங்கவில்லை. அதனை கேட்ட ஊழியரை, தனது வீட்டுக்குள் அழைத்து சென்று ஊழியரை சரமாரியாக தாக்கி விட்டு , ஊழியரை துரத்தி உள்ளார்
அதனை அடுத்து , தாக்குதலுக்கு இலக்கான ஊழியர் அது தொடர்பில் இளவாலை காவல்நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து , தாக்குதலாளியை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். மன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
Spread the love