தமிழ் திரையுலகில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகா் மாரிமுத்து மாரடைப்பினால் காலமாகியுள்ளாா். 57 வயதான அவருக்கு இன்று காலை டப்பிங்க் பணிகளை முடித்து விட்டு, வீடு திரும்பும் போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட் உயிாிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் வஸந்திடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து கண்ணும், கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர்.
ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக சேர்ந்த இவா் இயக்குநர்கள் வசந்த், ராஜ்கிரண், சீமான், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயத்குநராக பணியாற்றியவர் . இவர் அரண்மனை கிளி, என் ராசாவின் மனசிலே படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். ஆசை உள்ளிட்ட படங்களிலும் இயக்குநர் வசந்திற்கு உதவி இயக்குநராக இருந்தார்
பரியேறும் பெருமாள், விக்ரம், ஜெயிலர் என பல வெற்றிப்படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடபில் இவர் பேசும் ‘அட எம்மா ஏய்’ வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியு
இவரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது