திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில புலனாய்வுத்துறை பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான ஆணையை சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ”நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். இதற்கான தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது பிணையில் வரமுடியாத குற்றமாகும்” எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்த போது சந்திரபாபு நாயுடுவுக்கு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக அவா் புலனாய்வுத்துறை காவல்துறையினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.