502
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும் , பேத்தியும் தங்கியிருந்த நிலையில் , பேத்தியான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் , பாட்டி சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் தங்குமிட விடுதியில் , திருகோணமலையை சேர்ந்த பாட்டியும் , அவரது பேத்தியான சிறுமியும் , வாடகைக்கு அறை எடுத்து கடந்த சில நாட்களாக தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து , விடுதி நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அறையை திறந்து பார்த்த போது , சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிறுமி உயிரிழந்து 03 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை சிறுமியின் பாட்டி அருகில் இருந்த கட்டிலில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் காவல்துறையினர் அனுமதித்தனர்
சம்பவம் தொடர்பில்காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love