லிபியாவை தாக்கிய டேனியல் சூறாவளிப் புயல் காரணமாக உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 5,200 வாக அதிகாித்துள்ளதுடன் . 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் உருவான டேனியல் புயல் கடந்த 10 ஆம் திகதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்த போது மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியாவில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் இரண்டு அணைகள் உடைப்பெடுத்தன.
இதன் காரணமாக இதனால் டெர்னா, சூசா, பாய்தா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த டொ்னா நகருக்குள் வெள்ளம் வெகு சீற்றத்துடன் பாய்ந்து, அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருட்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச்சென்றது.
இந்த வெள்ளத்தில் 2000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானவா்கள் காணாமற்போனதாகவும் பிரதமர் ஒசாமா ஹமாட் அறிவித்திருந்தாா் . எனினும், தற்போது லிபியாவின் கிழக்கு அரசின் உள்விவகார அமைச்சு குறைந்தது 5,300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது