360
மூதாட்டி ஒருவருக்கு வாழ்வாதர உதவியாக வழங்கப்பட்ட கோழிகளை திருடர்கள் கூண்டோடு திருடி சென்றுள்ளனர் யாழ்ப்பாணம் கச்சாய் பகுதியில் வசிக்கும் மூதாட்டியின் கோழிக்கூடே கோழிகளுடன் களவாடி செல்லப்பட்டுள்ளது.
வறுமையில் வாடும் மூதாட்டி வாழ்வாதார உதவியாக கோழிகள் வழங்கப்பட்டதை அடுத்து , கோழிகள் மூலம் வருமானம் ஈட்டி , தனது வாழ்வை கொண்டு நடாத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மூதாட்டியின் கோழிகளை கூண்டோடு திருடர்கள் களவாடி சென்றுள்ளனர். அது தொடர்பில் மூதாட்டியினால் ,கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love