மட்டக்களப்பு – புனானையில் பற்றிக்கலோ கம்பஸ் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர் கல்வி நிறுவனம் மீளவும் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த கல்வி நிறுவனம் இன்று தன்னிடம் கையளிக்கப்பட்டதாக ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா தொிவித்துள்ளாா்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவின் கண்காணிப்பின் கீழ் பற்றிக்கலோ கம்பஸ் எனும் உயர் கல்வி நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னா் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடர்பில் சர்ச்சை உருவாகியிருந்ததனையடுத்து அதனை அரசு பொறுப்பேற்றிருந்தது.
பின்னர், கொரோனா காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்தப்பட்ட நிலையில் இன்று இராணுவத்தினரால் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, குறித்த கல்வி நிறுவனம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா தொிவித்துள்ளாா்.