353
யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துன்னாலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட கால முரண்பாடு நிலவி வந்த நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரு குழுக்களும் மோதிக்கொண்டன. மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love