அமைதிப்பேரணி வன்முறைத் தாக்குத , கண்டனம்
வடக்கு கிழக்கில் இந்திய அமைதி காப்புப் படை(IPKF) இருந்தபோது சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் தியாகத்தை நினைவுகூர்வதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அமைதியான வாகனப் பேரணி மீதும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட்ட தமிழ் செயற்பாட்டாளர்கள் மீதும் திருகோணமலையில் சிங்களக்கும் பலால் நடாத்தப்பட்ட தாக்குதலால் வடக்குகிழக்கில் உள்ள சிவில்சமூக அமைப்புகளாகிய நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைத் தொடர்ந்து மறுப்பதும், அதன் ஒருபகுதியாகிய தற்போதைய தாக்குதலும், தமிழரின் நினைவுகளையும் வரலாற்றையும் திட்டமிட்டு அகற்றும் நோக்கிலான நினைவழிப்பு(Memoricide) எனவேகருதப்பட முடியும்- தமிழ்மக்களின் கூட்டு நினைவுகளை பௌதிக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும், முறையாகத் திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கையாகும்- என்பதுடன் இது இனப்படுகொலை நோக்கமிருப்பதை நிரூபிக்கும் ஒருதெளிவான ஆதாரமாகவும் உள்ளது.
ஆகஸ்ட்2023 இல், சரத்வீரசேகரஎம்.பி, தமிழ்நீதிபதி ஒருவரை ‘மனநலம்பாதிக்கப்பட்டவர்’ என்றுமுத்திரைகுத்தி, அவர் “இலங்கைஒருசிங்கள-பௌத்ததேசம்என்பதைநீதிபதிபுரிந்துகொள்ளவேண்டும் அத்துடன் சிலதமிழ் நீதிபதிகள் வடக்குகிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் பாரம்பரியத்தின் நலனுக்கு எதிராக செயற்படுகின்றனர்” என்றுகூறினார். தமிழ் அரசியல்வாதிகள் வடக்குகிழக்கில் உள்ள பௌத்தஸ்தலங்களை குறிவைப்பதாக முறையிட்டகல்கமுவசாந்தபோதிதேரர், குருந்தூர் மலையே தமிழர்களின் இறுதிவழிபாடாக இருக்கும் என எச்சரித்துள்ளார். பௌத்த விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கைவைக்கும் தமிழர்கள் தலை துண்டிக்கப் படுவார்கள் எனக்கூறி, வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார் மேர்வின்சில்வா. இவைபோன்ற வெறுப்புப் பேச்சுக்கள் கட்டுப்படுத்தப்படாமல் போகின்றன, அதன் வளர்ச்சி திருகோணமலையில் சிங்களக் கும்பல்வன் முறையில் ஈடுபடுவதில் வந்து நிற்கின்றது.
தென்னிலங்கை கரிசனை யின்றி கண்மூடியிருக்கின்ற வடக்கு – கிழக்கில் இயல்பானதாக ஆகிவிட்ட கடுமையான இராணுவமயமாக்கலின் பின்னணியில், இந்தவன்முறைத் தாக்குதல்கள், தீவில் சட்டத்தின் ஆட்சி இல்லாததை மட்டுமல்ல, சட்டத்தை அமுல் படுத்துவதற்கான அமைப்பகள் தமிழர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் கைகோர்த்துள்ளதையும் உறுதிப்படுத்துகின்றன. அமைதிப்பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும், அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், கண்காணிக்கப் படுவதாகவும் ஏற்பாட்டாளர்களால் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்ட காவல்துறை, தாக்குதலைத் தடுக்க எதுவும் செய்யவில்லை, தாக்குதல்கள் நடத்தப்படும் போதுபார்த்துக் கொண்டிருந்தது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் இராணுவம் மற்றும் சட்ட அமுலாக்கத்துறைகளின் உடந்தை இல்லாமல் சிங்கள கும்பல் தாக்கத் துணிந்திராது என்பதை அம்பலப் படுத்துகிறது.
அரசாங்கம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைக்க முயலும் ஒருகட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்தத்தாக்குதல், எந்தவொரு உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் வெற்றிக்கு இன்றியமையாத தமிழர்கள் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை பெரும்பான்மை சமூகத்தினரிடையே இல்லை என்பதை மீள உறுதிசெய்கின்றது. நினைவேந்தல்கள் மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில்லை என்றாலும், சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு ம்நல்லிணக்கத்துக்கும் இன்றியமையாததாகவே இருக்கின்ற இரண்டவிடயங்களான உண்மைக்கான உரிமைமற்றும் கருத்துச் சுதந்திரத்துடன் உள்ளார்ந்த முறையில் பின்னிப் பிணைந்துள்ளது; நினைவேந்தல்கள் தடை செய்யப்படுவது முன்னெடுக்கப்படும் அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் எதிர் மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்கள், உள்ளக பொறுப்புக் கூறல் பொறிமுறைகளை நாம் ஏன் நம்பவில்லை என்ற எமது நிலைப்பாட்டுக்கு இவ்வாறான சம்பவங்கள் மேலும் சான்றாகின்றது.
அகிம்சை வழியிலான செயற்பாடுகளை பயங்கரவாதமாக சித்தரிப்பது என்பது, பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையான பிரச்சினையை தீர்ப்பதற்கான அவர்களது விருப்பமின்மையை நியாயப்படுத்த அடுத்தடுத்துவரும் அரசாங்கங்கள் கையாள்கின்ற ஒரு உத்தியாகும். அகிம்சை வழிப் போராட்டங்கள் தமிழ்க்கலாச் சாரத்திற்கு தனித்துவமானது ஏனெனில் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை அகிம்சை வழியிலேயே ஆரம்பித்தார்கள் என்பதை நினைவில் கொள்ளும் அதேவேளை இலங்கை அரசு தமிழர்களின் அகிம்சை வழி எதிர்ப்புகளைக் கூட எப்போதும் அழிக்கும் என்ற உண்மையை இந்த சம்பவம் வருத்தந்தக் கவகையில் வெளிப்படுத்துகிறது.
எனவே இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும், தீவில் உள்ள நீதி அமைப்பு தமிழர்களுக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லா விட்டாலும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குற்றவாளிகள் நீதி விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
கையொப்பமிடுவோர்
Adayaalam Centre for Policy Research
Assosciation for Relatives of the Enforced Disapperences North&East
Civil Society activists forum, Ampara
Kithusara Group
Priests and Religious for Justice and Peace, North-East
Puzhuthi – Organisation for Social Rights.
Social Science Research Centre
Tamil Civil Society Forum (TCSF)
Tamil Social Activist network
United Women Voice, Trincomalee
Voice of the Voiceless
அமைதிப்பேரணி மீதான வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம்
397
Spread the love
previous post