318
யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையில் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடசலையில் இடம்பெற்றது, இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்தவர்களது உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமான படையின் புக்காரா விமானம் நாகர்கோவில் மகா வித்தியாலயம் இரண்டு குண்டுகளை வீசி தாக்குதல் நடாத்தி இருந்தது. அதில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேர் படுகொலையானர்கள் , அத்துடன் 35க்கும் அதிகமான மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர்.
Spread the love