வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்திதுடன் பலரைப் பணயக் கைதிகளாக பித்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 6-வது நாளாக இடம்பெற்ற தாக்குதலுடன் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையிலேயே , வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெற்கு பகுதிக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் , ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், பாடசாலைகள் உட்பட அனைத்து இடங்களிலும் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறுமாறு அறிவித்துள்ளது.