474
யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விவசாய காணிகளில் பெரும் பகுதி விடுவிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் , உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பெருமளவான காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட அரச காணிகளை காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளோம். அவற்றில் UNDP யின் நிதி அனுசரணையில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்னமும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணிகளே உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. அவற்றில் பெருமளவான விவசாய காணிகளும் உள்ளடக்கம்.
விவசாய நிலங்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கமைவாக யாழில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய காணிகளில் பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் உள்ளன என தெரிவித்தார்.
Spread the love