484
எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம் பெற்றது. இதன் போது ஹர்தால் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள், கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களை சந்திப்பது, இந்தியப் பிரதமருக்கான கடிதம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Spread the love