காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை மூலம் குண்டுகள் வீசி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 500 பேர் பலியாகி உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மீது ஏவுகணை வீசியதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை பாலஸ்தீனத்தின் ஏவுகணை தான் தவறுதலாக விழுந்திருக்கும் என இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்குமிடையில் கடந்த ஒக்டோபர் 7 ம் திகதி ஆரம்பமான போர் 11 நாட்களை கடந்தும் போர் தீவிரமாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உள்ள பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வருகிறது. பதிலுக்கு ஹமாஸ் இயக்கத்தினரும் குண்டுகளை வீசி வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து ஏராளமான ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டதால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் மிக கொடூரமாக காஸாவில் உள்ள காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதுடன் ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது