ஜனாதிபதி எதைச் சொன்னாலும் கிழக்கில் எதுவும் நடக்காது என்ற நிலைமைதான் காணப்படுகிறது. றிப்பாக ஆக்கிரமிப்பு காணிகளை விடுவிக்க வேண்டுமென்று ஜனாதிபதி சொன்ன பின்னரும் அங்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிற்கு சென்று கட்சி உறுப்பின்ர்களைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் மயிலத்தமடுவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தும் கலந்துரையாடியிருந்தேன்.அதன் போது அங்குள்ள பல்வேறு விடயங்களைத் தெரிந்து கொண்டிருந்தேன். அந்த மக்களின் கால்நடைகளை அழித்து, அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்து, சிங்கள மயமாக்குகின்ற வகையில் தொடர்ந்தும் பல்வேறு வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக மிக மிக மோசமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபாய நிலைமையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த மாவட்டத்திற்கு சென்ற போதும் அவர்களைச் சந்திக்காமலேயே சென்றிருக்கின்றார். இவ்வாறான நிலைமையில் சில தினங்களிற்கு முன்னர் அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்க வேண்டுமென்று அறிவித்திருக்கின்றார்.
ஆனால் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வந்த பின்னர் கூட அங்கிருந்த தமிழ் மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டமை மாத்திரமல்லாமல், அங்கு தமிழ் மக்கள் போக முடியாதவாறு அச்சுறுத்தல் விடுத்து, அவர்களை விரட்டி அனுப்புகின்ற நிலைதான் உள்ளது.
ஆக, ஜனாதிபதி எதைச் சொன்னா லும் அங்கு எதுவும் நடக்காது என்ற நிலைமைதான் காணப்படுகிறது. அங்கு திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிற போது ஜனாதிபதி எதனைக் கூறினாலும் அதைக் கேட்காமல்தான் செயற்படுகிறார்கள் என்றார்