இன்று (20) முதல் இலங்கை மின்சார சபை மின் கட்டணத்தை 18 சதவீதம் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளது. . அங்கீகரிக்கப்பட்ட கட்டணமானது இன்று முதல் ஜூன் 30, 2024 வரை அமுலில் இருக்கும். இந்த வருடத்தில் இவ்வாறு மின் கட்டணம் உயர்த்ப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.
அதன்படி 0-30 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. குறித்த வகுப்பின் மின் அலகு ஒன்றின் விலை 12 ரூபாய் ஆகும். 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 300 ரூபாவில் இருந்து 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. குறித்த வகுப்பின் மின் அலகு ஒன்றின் விலை 30 ரூபாய் ஆகும்.
61 முதல் 90 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 400 ரூபாவில் இருந்து 480 ரூபாவாகவும், 91 முதல் 120 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1000 ரூபாவில் இருந்து 1180 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது..மேலும், 121 முதல்180 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1,500 ரூபாவில் இருந்து 1,770 ரூபாவாகவும், 180 அலகுகளுக்கு மேல் நிலையான கட்டணம் 2,000 ரூபாவில் இருந்து 2,360 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்களின் மேல் மேலும் சுமையை சுமத்தும் வகையில் இந்த மின் கட்டண அதிகரிப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது