இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், திடீரென நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலர் இஸ்ரேலின் பீரங்கி தாக்குதலால் எகிப்து நாட்டு வீரர்கள் காயமடைந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எகிப்து , ஹமாஸ் இயக்கதினருக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் தொிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் நேரடியாக மோதலில் ஈடுபடவில்லை.
மேலும், சர்வதேச வர்த்தகத்தின் அடிநாதமாக இருக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தில்தான் உள்ளதனால் உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 12% இந்த சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகின்றது. இந்த மோதலினால் வந்து சூயஸ் கால்வாயின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் அது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி. உலகின் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதேவுளை இந்த தாக்குதல் திட்டமிடப்பட்ட தாக்குதல் இல்லை எனவும் தவறுதலாக எகிப்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக இஸ்ரேல் ராணுவம் தொிவித்த போதிலும் , இது குறித்து விரிவான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.