386
போதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதி பாத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை ஊர்காவற்துறை காவல்துறையின ர் மறித்து சோதனையிட்ட போது , சாரதி போதையில் இருந்ததை கண்டறிந்தனர்.
அதனை அடுத்து சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சாரதியை காவல்துறையினர் முற்படுத்திய போது , சாரதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.
அதனை அடுத்து , அவரது சாரதி அனுமதி பத்திரத்தை ஒருவருட காலத்திற்கு மன்று இரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
Spread the love