421
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் கல்லூரில் பிரதான வாயிலுக்கு அருகில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களை இந்திய இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.
Spread the love