371
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளை வனவள பாதுகாப்பு மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமானது என்ற வர்த்தமானி வெளியீட்டை மீள பெறுமாறு ஜனாதிபதியை கோருவது என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. அதன் போது ,
வடமராட்சி கிழக்கின் சில பகுதிகளில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகளை 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் வனவள பாதுகாப்பு பிரிவுக்கும் , அரச திணைக்களங்களுக்கும் சொந்தமானது என வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டமையால் , அக் காணிகளில் வாழ்ந்த பலரும் காணிகள் இல்லாத நிலையில் தற்காலிக இடங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் காணி தொடர்பிலான அனைத்து விடயங்களையும் பரிசீலிக்குமாறும் , பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியை மீள பெறுமாறும் ஜனாதிபதியை கோருவதாக தீர்மானிக்கப்பட்டது.
Spread the love