269
கொழும்பு இசுறுபாய முன்பாக கடந்த 24ஆம் திகதி நடத்திய அதிபர், ஆசிரியர் போராட்ட ஊர்வலத்தின் மீது நடாத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாடளாவிய ரீதியில் பாடசாலை முன்பாக போராட்டம் இடம்பெற்றது.
பாடசாலை நிறைவடைந்த பின்னர் தமது பாடசாலைகளின் முன்பாக நின்று அதிபர், ஆசிரியர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதனொரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுபோதினி அறிக்கையின்படி சம்பளத்தினை அதிகரிக்க வேண்டும் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.
Spread the love