288
மன்னார் பிரதான தபாலக வீதியில் வைத்து ஒரு தொகுதி ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (27) மதியம் ஒருவர் மன்னார் காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 315 ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகள் மீட்கப் பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய மன்னார் மாவட்ட சிரேஸ்டகாவல்துறை அத்தியட்சகர் சந்திர பால வின் பணிப்புரைக்கு அமைவாக செயல்பட்ட மன்னார் காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த நபரை கைது செய்ததோடு
ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரிடம் மன்னார் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணையின் பின் மீட்கப்பட்ட ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
Spread the love