383
தனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய் பகுதியில் அரசியல் கட்சி ஒன்றின் மக்கள் தொடர்பு அலுவலகம் ஒன்று அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இயங்கி வருகிறது.
குறித்த வீட்டில் இருந்து கட்சியினரை வெளியேறுமாறு தான் பல தடவைகள் கோரிய போதிலும், அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள் இல்லை , எனவே அவர்களை வெளியேற்றி உதவுமாறு காவல்நிலையத்தில் முறையிட்டு உள்ளார்
Spread the love