390
யாழ்ப்பாணம் மாநகரில் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடியவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையினர் கூறினர்.
யாழப்பாணம் செல்வா திரையரங்கு முன்பகுதியில் கடந்த 29ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை திருடப்பட்டுவிட்டது என்று யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்ற விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலமையிலான குழுவினர் மேற்கொண்ட நிலையில் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
Spread the love